Sunday, February 2, 2014

சகோ மு மாலிக்கின் அர்த்தமுள்ள பதிவும்,நண்பர் வெட்டிப் பேச்சின் வீண் பதிவும்.

வணக்கம் நண்பர்களே,

இப்பதிவில் இரு பதிவுகளின் மீதான விமர்சனம் பார்க்கப் போகிறோம்.முதல் பதிவு சகோ மு.மாலிக் எழுதிய 

"மதம்"- " நம்பிக்கை": வேறுபாடு பற்றிஒரு சிந்தனை


சகோ மு.மாலிக் ஆத்திகர் என்றாலும் எதார்த்த,நடுநிலை தவறா மனிதர் என்பது நமது  கருத்து.ஆ(நா)த்திகம் பற்றிய சரியான புரிதல் உடையவர்.தன் மதம் தவறு சேர்ந்தவர் செய்தாலும் விமர்சிக்க த்யங்காதவர். அவரின் பதிவுகள் தொடர்ந்து படிப்பவன் என்ற முறையில் மட்டுமே இதனை எழுதுகிறேன்.

ஆத்திகம்,நாத்திகம் இரண்டிலும் பலவிதம்.இரண்டுக்கும் பொதுவான சில விடயங்களும் உண்டு என்னும் நமது கருத்தையே பதிவுகளில் வலியுறுத்துகிறோம்.அது போலவே இப்பதிவும் இருப்பதை வியக்கிறேன். அப்பதிவின் சாரம் இந்த வரிகளில் இதோ!!.

1./அனைத்து மதத்தினர் மத்தியிலும் "நம்பிக்கை" என்று ஒன்று உண்டு. /
2./“இதனால், "இந்து நம்பிக்கை" என்ற சொல்லிற்கும், "இஸ்லாமிய மதம்" என்ற சொல்லிற்கும் அர்த்தமில்லை. இந்து மதத்தினர்கள் எனக் கருதப்படுபவர்களில், அத்வைதம், புராண நம்பிக்கைகள் என ஒன்றுக் கொன்று சம்பந்தமே இல்லாத நம்பிக்கைகள் இருக்கின்றன.

அது போலவே, "இஸ்லாமிய மதம்" என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. "இஸ்லாமிய நம்பிக்கைகள்" என்று உண்டு”/.


இதே போன்ற கருத்தினை சொல்லும் நம் பதிவு!!!

மூன்று வகை நம்பிக்கைகள்!!




1./நம்பிக்கை இல்லா மனிதர் உலகில் எவரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை உண்டு. அப்படி பிறரை பாதிக்காமல் நம்பிக்கைகள் தனிப்ட்ட வகையில் கொள்ள உரிமையும் உண்டு./

2./ நம்பிக்கைகளின் மூன்று வகை,

1. சான்று சாரா நம்பிக்கை

2. சான்று இல்லாமை மீதான நம்பிக்கை

3. சான்றின் மீதான கணிப்பு நம்பிக்கை.
/
சகோ மாலிக்கின் கருத்துகளோடு 100% உடன் படுகிறேன்.வாழ்த்துக்கள் சகோ மாலிக்!!!.



 சரி இன்னொரு பதிவினையும் பார்ப்போம்!!


என்ன சொல்கிறார் நண்பர்?

1.//எனது சிறுவயதில் கடவுள் மறுப்புக் கொள்கை மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்ததென்னவோ உண்மைதான். வளர வளர இது சரியா எனத் தோன்றியது.//

// அப்போது கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் சமூக நீதி காக்க கடவுள் மறுப்புக் கொள்கை அவசியமாகிறதுஎன்றனர். சாமியை அடிச்சா சாமியார் சரியாயிருவான்என்றனர். எனக்கு குழப்பமாயிருந்தது. எதிர் வீட்டுக்காரனை சரி செய்ய பக்கத்து வீட்டுக் காரனை அடிப்பது சரியாகுமா? இவர்கள் ஏன் சரியைச் சரியென்றும் தவறைத் தவறென்றும் தயக்கமில்லாமல் குழப்பமில்லாமல் சொல்ல மறுக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஆராய்ந்து பார்த்ததில் அவர்கள் மூட வழக்கங்களுக்கும் சமூக அநீதிகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு உண்மையை மறுப்பதைப் போன்று தோன்றியது. சமூக அநீதிகளையும் மூட வழக்கங்களையும் மறுப்பதைச் சரியென்று சொன்னாலும் கடவுளையே மறுப்பது சரியாகுமா?

இந்தக் குழப்பம் சரியாகுமுன்னரே அவர்களது வாதத்தின் போக்கு மாறியது. நாங்கள் பிராமணர்களுக்கு எதிரானவர்களல்ல பிராமணியத்திற்கு எதிரானவர்கள்என்றனர். எனக்கு இதுவெல்லாம் ஓட்டு வங்கிப் பேச்சு என நாள்பட நாள்பட புரிந்தது. பிறகுதான் தெளிந்து முடிவெடுத்தேன். //

சிறு வயது முதல் இறைமறுப்பு என்றால் திராவிட பகுத்தறிவுக் குடும்பத்தில் பிறந்து ,இட ஒதுக்கீட்டில் கல்வி கற்று , நல்ல வேலை கிடைத்த பின் , கிடைத்த மேல் தட்டு மக்களின் சகவாசத்தில் கருத்து மாறியவர் என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தின் பெரு நரம் அல்லது ,இதர மாநிலத்தில் வசிக்கும் வாய்ப்பும் அதிகம்.இந்தி படித்தால் நல்லது என்னும் கருத்தினையும் கொண்டும் இருப்பவர் என்பதும் நிச்சயம். சாதி ஒடுக்குமுறைக்கு அஞ்சி இதற்கு தமிழகம் நோக்கி புகலிடம் தேடி வரும் பீஹார் மாநில தலித்கள் பதில் சொல்வார்கள்.மத புத்தகம் பற்றி ஏதேனும் சாமியார் சொல்வதை பின் பற்ற ஆரம்பித்து இருக்கிறார் என்பதுதான் உண்மை.வாழும் கலை இரவிசங்கர்  அல்லது அனைத்துக்கும் ஆசைப்படு ஜக்கியின் பாணி கருத்துகளில் தெரிகிறது. இது போல் பலரை நான் அறிவேன்.

திராவிட இயக்கத்தின் கடவுள் மறுப்பு,உயர் சாதி எதிர்ப்பு என்பது அக்காலத்தின் கட்டாயம். திராவிட இயக்கம் அல்லாமல் பல நாத்திக இயக்கங்கள் உலகில் பல உண்டு. பல்நாடுகளில் கிறித்தவ மதத்தை அரசியலுக்கு அப்பால் தள்ளியதில் இந்த இயக்கங்களின் பங்கு மிக அதிகம். இந்துக்கள் அதிகம் இந்தியா(தமிழகம்)வில் இருப்பதால் திராவிட இயக்கத்தினர் இந்து மதத்த்தினை அதிகம் விமர்சித்தனர் என்பதே உண்மை.
ஆகவே திராவிட இயக்கம் தவிர்த்து வேறு நாத்திக இயக்கங்கள் கூட‌ இருக்கின்றன என்பதை அறியாதவரை என்ன சொல்வது???

  
இன்றைய திராவிட இயக்கங்களின் செயல் பாட்டில் நமக்கு விமர்சனம் உண்டு. உயர்சாதியினர் இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவது சான்று ரீதியாக உண்மை எனில் அவர்களில் பின் தங்கியோருக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்பது நம் கருத்து. பிறப்பு அடிப்படையில் யாரையும் எதிர்த்தல் தேவை இல்லை என்கிறோம்.

அவர்கள் மீது நமக்கு சில மாற்றுக் கருத்துகள்,விமர்சனங்கள்  உண்டு என்றாலும்,ஒரு சராசரித் தமிழனின் மத சார்பின்மை திராவிட இயக்கங்களின் பங்களிப்பு எனவே சொல்ல முடியும்.

இந்தியா மதரீதியாக பிளவு பட்ட போது ,வட இந்தியாவில் 10 இலட்சம் பேர் இறந்தனர்.சென்னை மாகாணம் மட்டும் அமைதியாக இருந்தமை இதன் சான்று!!.

*
2./ இறை என்ற பேருண்மைக்குச் சாட்சியாய் இந்தப் பிரபஞ்சமும் அதன் இயக்கமும் மட்டுமல்லாது அதன் சுய சார்புத்தன்மையையும் self sustaining ability நின்றது. இவைகளுக்கு விஞ்ஞானம் விளக்கம் அளிக்கலாமே தவிர எவ்வகையிலும் அதனை உருவாக்க முடியாது என்பதும் புரிந்தது./

"கூரை மேல் ஏறி கோழி பிடிக்காதவன் வானத்தின் மேல் ஏறி வைகுண்டத்தை பிடிப்பேன் என்றானாம்."

பிரபஞ்சத்தில் நாம் அறிந்தவரை பூமி மட்டுமே உயிர் வாழ தகுதி வாந்தது. இன்னும் சில இருப்பதாக சில கணிப்புகள் உண்டு. ஆகவே பூமியில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களின் அனைவரின் சுய  தேவைகள் பூர்த்தி ஆகும் வண்ணம் இருந்து இருக்கிறதா என்பதைப் பார்த்தால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடும்.

பிறவிக் குறைபாடு உடையோர்,மூன்றாம் பாலினத்தவர்,இயற்கை சீற்றங்கள்,விலங்களில் கூட ஓரினப் புணர்ச்சி ,உலகில் பரிணமித்த 99% உயிரினங்கள் மறைந்தமை என எதையும் கணக்கில் எடுக்காமல் பேசுவதை என்ன சொல்வது?????

மனிதன் எல்லாரும் நல்லவராக இருந்தால்,சரியாகி விடும், மனிதன் செயலுக்கு கடவுள் என்ன செய்வார்? என விதண்டாவாதம் தவறு. சிலர் ,பலரை விட தன்னை உயர்ந்தவராக காட்ட கண்டுபிடித்ததே கடவுள். இன்றும் சாமி கொடுத்த பூமி என இஸ்ரேல் பாலஸ்தினர்களின் நாட்டை ஆக்கிரமிப்பு செய்வதை,பல இலட்சம் உயிரிழப்பின் பின்னும் தீர்க்க முடியவிலை.என் கணிப்பின் படி இஸ்ரேல் சிரியா,இராக்கையும் சேர்த்துப் பிடிக்கும் சாத்தியம் அதிகம்!!!அப்படி நடந்தால் இது கடவுளின் செயல் என ஆக்கிரமிக்கப் படுபவன் ஒத்துக் கொள்வானா???

மதம்.அதனை வைத்து சுரண்டுபவனே மதவாதி. மதம் அரசியலில் கலக்காமல் இருப்பது மிக அவசியம்.

அரசியலில் தவறு செய்தால் தேர்தலில் தோற்றுப் போவார். மதத்தில் நடக்குமா??

சகோ மணிமாறனின் கேள்வியின் நியாயம் எனக்குப் புரிகிறது!!!


ஸ்டாலின்-அழகிரி இழிவான சண்டை; ஜெயேந்திரன் நடத்தியது புரட்சிகரப் போராட்டம்.


நாத்திக அரசியல்வாதி தவறு செய்தால் ஓட்டு போட்டு தோற்கடித்து விட்டு மாற்று ஆளைக் கொண்டு வரலாம். ஒரு மத வழிபாட்டுத் தலத்தை இடித்து, இன்னொரு மத  கோயில் கட்டுபவனின் செயலில் எதற்கு,எந்தக் கடவுளின் ஆதரவு?.இப்படி இன்னொரு மத‌ இடத்தில் கோயில் கட்டத் துடிக்கும் கோமகன்களுக்கா ஓட்டு? ஹி ஹி

மதம் என்பது பலரை சுரண்டிப் பிழைக்கும் சிலரின் தந்திரம் மட்டுமே. கடவுள் செயல் எது என்பதை ஆத்திகர்கள் எதார்த்த வாழ்வில் விளக்கினால் தன்யன் ஆவோம்.


3./ இன்றைக்கும் கூட மனிதனின் பரிணாம வளர்ச்சி என்று ஒன்று நடந்திருக்கலாம் என்று ஒரு HYPOTHESIS தான் உள்ளதே தவிர பரிணாம வளர்ச்சியைக் கண்டாரில்லை. மேலும் ஒரே நேரத்தில் அனைத்து உயிர்களும் தோன்றின என்பதற்கு இனிமேல் ஆதாரங்களே கிடைக்காது என்றும் அறுதியிட்டுச் சொல்வாரில்லை.//

இது அதை விட மோசம்!!! இட ஒதுக்கீடு,அரசியல் குழப்பி பிறகு அறிவியலையும் சேர்த்து குழப்புவது.

பரிணாமக் கொள்கையில் பிற அறிவியல் கொள்கை போலவே சான்றளிக்கபட்ட உண்மைகளும் உண்டு. கணிப்புகளும் உண்டு. அறிவியல் என்பது தொடர் பயணம். கிடைத்த சான்றுகளின் விள்க்கமே அறிவியல். இனிமேல் இப்படி சான்று கிடைக்காது என்று பரிணாமத்தில் சொல்ல முடியும்.

கேம்பிரியன் காலத்திற்கு[500 மில்லியன்] முந்தைய மனித உரு படிமங்கள்.

அப்புறம் பரிணாமக் கொள்கைக்கும்,ஆத்திகத்திற்கு முரண் கிடையாது. சில ஆத்திக குழுக்கள் மட்டுமே இக்கருத்தினை கொண்டுள்ளனர்.

ஆகவே நண்பர் வெட்டிப் பேச்சு சொல்லும் கடவுள் பரிணாமம் உண்மை என்றால் அவர் ஒரு கற்பனை சரியா?????

இந்து மதத்தில் இஸ்கான், இஸ்லாமில் வஹாபிகள்,கிறித்தவத்தில் பெந்தே கோஸ்தே போன்ற குழுக்கள் மட்டுமே. பரிணாமத்தை இறைவனின் செயலாக ஏற்கும் ஆத்திக குழுக்கள் உண்டு.

கிறித்தவத்தில் ரோமன் கத்தோலிக்கம்,இஸ்லாமின் அகமதியா பிரிவு போன்ற்வற்றை சொல்லலாம்.

நண்பர் கொஞ்சமாவது அறிவியல், வர‌லாறு,மதங்களின் கொள்கைகள் பற்றி படிக்க வேண்டும்.

4./ இது தவிர  இயற்கையிலுள்ள சூரியன், சந்திரன், பூமி அதிலுள்ள செடி கொடிகள் விலங்குகள் பறவைகள் மற்ற இவைகள் யாவும் ecological pyramid ன் உச்சத்திலிருக்கும் மனிதனுக்காக, அவனது பயனுக்காக இருப்பதையும் அறியலாம். இவை எல்லாவற்றையும் அவனுக்காக படைத்த கடவுளுக்கு அவன் நன்றி சொல்வதிலும் அவரை அங்கீகரிப்பதிலும் தவறொன்றுமில்லை எனவே எனக்குப் படுகிறது./
அப்புறம் எகாலாஜி பிரமிட் என எதை சொல்கிறார்?அதில் பல வகை,ஒவ்வொன்றிலும் மனிதனுக்கு ஒரு இடம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
An ecological pyramid (also trophic pyramid or energy pyramid) is a graphical representation designed to show the biomass or biomass productivity at each trophic level in a given ecosystem.

இதுவும் காலத்தை , உணவுப் பழக்கம் வைத்து பொறுத்து மாறுமாம்!!!!!!


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியலை!!!!!!

மனிதன் உச்சம் என்பதும் கற்பனையே,பூமியின் 350 கோடி உயிர் வரலாற்றில் மனிதனின் நாகரிகம் எல்லாம் வெறும் 7000 ஆண்டுகள் மட்டுமே.

டைனோசார்கள் அழியாமல் இருந்து இருந்தால் மனித இனம் தோன்றி இருக்குமா என்பதே சந்தேகம்.

மறைந்த டைனோசார்களில் வெட்டிப் பேச்சு டைனோசார் ஒன்று கூட இதே கருத்தைக் கொண்டு இருக்கலாம்.

திறமை என்பதன் விளக்கம் சார்பியல் சாந்தது.

பூமியை(இயற்கையை) சீரழிப்பதில் மனிதனின் சாதனை தற்கொலைக்கு நிகரானது,மக்கள் தொகைப் பெருக்கம், சுற்று சூழலை பாதித்தல், அணு ஆயுதங்கள் என பூமியை எங்கே அழைத்து செல்கிறான்??

பரிணாமத்தின் படி ஒவ்வொரு உயிரிக்கும் தோற்றம் மறைவு உண்டு. உலகில் தோன்றிய 99% உயிரிகள் மறைந்தது போல் மனிதனும் மறையாம‌ல் இருக்க என்ன உத்திரவாதம்???

ஆகவே சகோ வெட்டிப் பேச்சு ஏதோ ஒரு வகையில்(father complexity) மன சாந்திக்காக ,அவரை ஒரு சக்தி பாதுகாக்கிறது என நம்புவதில் நம்க்கு ஆட்சேபனை இல்லை என்றாலும், அதனை வலியுறுத்த தவறான, வரலாறு,அறிவியல்,சமூகவியல் கருத்துகளை மேற்கோள் காட்டினால் மறுப்பு இடுவது கட்டாயம் ஆகிறது.

நண்பர் வெட்டிப் பேச்சின் கடவுள் மத புத்தகம்  சொல்லாத‌ கடவுள் ,மனிதர்களின் செயல்களுக்கு பொறுப்பு ஏற்காத பொறுப்பற்ற சக்தி!!!  அதனை அவர் பொழுது போகாத பொம்முவாக தேடுவதற்கு நாம் ஆதரவு கொடுக்கிறோம். அந்த தேடல்களை எல்லாம் அவ்சியம் (நகைச்சுவை) பதிவாக இட வேண்டுகிறோம்.

விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன. ஆனால் மெதுவாக மட்டுமே பதில் அளிப்பேன்,அவசியம் எனில் பதிவும் எழுதுவோம்.


நன்றி